மைக்ரோ கதை/ஆதினமிளகி, வீரசிகாமணி

அரசர் ஒருவரிடம் அறிவாளியான அமைச்சர் ஒருவர் இருந்தார். நாளாக நாளாக அவருக்கு அமைச்சர் வேலை அலுத்துப் போனது. அதனால் ஒரு நாள் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, துறவறம் பூண்டார்.
யாரும் இல்லாத காட்டில் போய் தங்கி வழிபாடு செய்து காலம் கடத்தினார். அமைச்சர் இல்லாதது அரசருக்கு கை ஒடிந்தது போல இருந்தது. காட்டிற்குச் சென்று துறவியான அமைச்சர் முன் நின்று, அரசர் கெஞ்சும் குரலில், “நீங்கள் மறுபடியும் அமைச்சர் பணிக்கு வர வேண்டும். அரண் மனையில் இல்லாத வசதி அப்படி இங்கே என்ன இருக் கிறது?’ என்று கேட்டார். அதற்கு துறவி சொன்னார்: “அரண்மனையில் நான் உங்கள் முன் பணிவாக நிற்க வேண்டும். இப்போது நீங்கள் என் முன் நிற்கிறீர்கள்”.