புதுமைப் பெண்/கலாவதி பாஸ்கரன்

மகளிர் தினத்தை
மனம் போன போக்கில்
மகிழ்ந்து கொண்டாடி,
நள்ளிரவில் வீடு திரும்பிய
நவநாகரிக மங்கை
காலணிகளை
கவனமாக கழற்றி
சத்தமில்லாமல்
வந்தாள் அறைக்கு,
யாரும் அறியாமல் !