
மழையை நேசிப்பதாகச் சொல்கிறாய்;
குடையை விரிக்கிறாய்!
வெயிலை நேசிப்பதாகச் சொல்கிறாய்;
நிழல் தேடி ஒதுங்குகிறாய்!
காற்றை நேசிப்பதாகச் சொல்கிறாய்;
சாளரத்தை மூடுகிறாய்!
எனக்கு பயமாக இருக்கிறது
நீ
என்னை நேசிப்பதாகச் சொல்லும் போது!
(முகநூலில் வாசித்த ஓர் ஆங்கிலக் கவிதையின் தாக்கம்).😊
