முறிஞ்சி/ராம் ஆனந்த்

வரையப்பட்ட ஓவியத்தில் தெளிக்கப்பட்ட நீராய் அவள்.
ஒத்தி எடுத்துவிட முயன்றேன்
அப்பிக் கொள்கிறாள் அட்டையென.
பார்த்துக்கொண்டே இருக்கிறேன் ஓவியத்தை,
அன்பின் சுரத்தலில் அழகு பெற்றெழுந்தது என் முன்.
அவளிடம் பேசினேன்,
காணாமல் போன அவள்,
கண்ணீரில் வழிந்தொழுகும் துளியென விழுந்து ஓவியமானாள் என்னுள்.