வாரச் சந்தை/சுரேஷ் ராஜகோபால்

வாரம் தோறும்
எங்கள் ஊரில்
சந்தை நடக்கும்;
ஊரில் உள்ள
எல்லாமே கடை வீதியில்
விரவிக் கிடக்கும்.

மாடு பிடித்து
வருபவர்களை மாடே
இழுத்து வரும்
விலை போகும் மாடுகள்
கம்பீரமாக நிற்கும்
விலை பேசும் மனிதன்
குனிந்தே விலை போவான்

#