உறவெனும் புதிய வானம்.!/
ஆர்க்கே!


அப்பாவிடம் எதுவும் கேட்கலாம்
அம்மாவிடம் எல்லாம் சொல்லலாம்
அண்ணனிடம் எதிர்த்துப் பேசலாம்
அக்காவிடம் அன்பைச் சுரண்டலாம்
தங்கையிடம் சண்டை போடலாம்
தம்பியிடம் உபதேசம் செய்யலாம்
மாமாவிடம் மனதைப் பகிரலாம்
அத்தையிடம் நம்பி உண்ணலாம்
சித்தப்பாவிடம் தோழமை கொள்ளலாம்
சித்தியிடம் பொய்சத்தியம் வைக்கலாம்
இரத்த பந்தங்கள் இப்படியாய்
உணர்த்தியுனக்கு வாய்த்துவிட்டால்
இனிமேலுனக்கு
இறைதர வேறென்னயிருக்கு?

3 Comments on “உறவெனும் புதிய வானம்.!/
ஆர்க்கே!”

  1. …………….இரத்த பந்தங்கள் இப்படியாய்
    உணர்த்தி தோள் கொடுக்க நண்பர்கள் வாய்த்துவிட்டால்
    இனிமேலுனக்கு
    இறைதர வேறென்னயிருக்கு?
    ….இது எப்படி இருக்கு…

Comments are closed.