
சுருங்கியத் தோலும் தொந்தியுமாய் பாட்டி
இழுத்து அண்ணாந்துப் பார்க்கும் குழந்தை
மெல்ல மலர்கிறது பொக்கைவாய்ச் சிரிப்பு
தொடரியில் சிறு பயணம்
********
வரிசையாக நிற்கும் வாடகை வாகனங்கள்
செயலியின் வழியாக நடக்கும் முன்பதிவுகள்
காத்திருக்கும் வேளையில் துளைக்கும் பார்வைகள்
எதற்கோ ஓடும் மக்கள்
********
ஆழ்ந்த அமைதியைக் கலைக்கும் சலசலப்புகள்
ஆங்காங்கே ஒளிரும் இரட்டைக் கண்கள்
மெல்லியதாக ஊடுருவும் நிலவின் தண்ணொளி
அடர்இருள் உறையும் காடுகள்
