தொலைந்து போன குருவி/நாகேந்திர பாரதி


கொட்டி வைத்த குறுநெல்லைக்
குத்தி விட்டுக் கிளறும்
கோபப் பார்வை பார்த்து விட்டால்
கிட்ட வந்து கெஞ்சும்

ஒவ்வொரு வாய் நெல்லுக்கும்
அலகு சுத்தம் செய்யும்
ஓரமாகப் போய் நின்று
கழுத்தொடித்துப் பார்க்கும்

‘விருட்’ டென்று சிறகடித்து
வேலை போலப் பறக்கும்
‘பொசுக்’ கென்று திரும்பி வந்து
புன்முறுவல் பூக்கும்

போன வாரம் போனது தான்
ஆள இன்னும் காணோம்
வேப்ப மரக் கிளை கூட
வெறிச்சோடிக் கிடக்கு