ஞானக் கிடக்கை.!/ஆர்க்கே

இன்றைய 99 வது நிகழ்வில் வாசித்த என் கவிதை!


எனக்காக இத்தனை மாலைகளா?

என் முகம் பார்க்கவென இத்தனை
மனிதர்களா?

என் போக்கிற்கு விதிவிலக்கான
என் மௌனத்தைத் தேக்கிக்கொள்ள
இத்தனை ஜதை செவிகளா?

உறைந்த என் முகமெதிரே
கண் சிமிட்டாத கைபேசி காமெராக்களா?

கவிந்து குவிந்த கூட்டம் நடுவே
உயரலைக்குரல்கள் ஒடுங்கி
எங்கும்
மென் பேச்சு கமழ்கிறது.
இறந்து கிடக்கிறேன்
எழ முடியாமல்.

இருந்து வாழ்தல்
இறந்து போதல்
விதிச்சொக்கட்டானில்
விழுகிற தாயத்தில்
எது வரம் எது சாபம்?
எது வலி எது களி?