நான் கடவுள்/ப.மதியழகன்

(இன்று விருட்சம் கவியரங்கில் நான் வாசித்த கவிதை)

டொக் டொக் டொக்
நபர்: யாரது?
கடவுள்: கடவுள்
நபர்: ஜனனக் கடவுளா? மரணக் கடவுளா?
கடவுள்: இரண்டும்!
நபர்: எப்படி இருவேலையையும் நீரே பார்க்கின்றீர்
கடவுள்: மனிதர்களை நாடிப்பிடித்தப் பார்த்தவன் நான்
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பார்கள்
நபர்: அப்போது மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லை அப்படித்தானே
கடவுள்: நிச்சயமாக
நபர்: என் அறைக் கதவைத் தட்டுவதற்கு என்ன காரணம்
கடவுள்: உன்னால் எனக்கு ஓர் காரியம் ஆகவேண்டும்
நபர்: கடவுளுக்கே என்னாலா? என்னடா இது ஆச்சரிமாய் இருக்கின்றது
கடவுள்: என் நிலைமையில் உன்னை வைத்துப் பார்
நபர்: சரி. அப்படியென்ன தலை போகிற காரியம்
கடவுள்: நீ பத்தாவது மாடியிலிருந்து கீழே குதிக்க வேண்டும்
நபர்: என்னது நானா?
என்னைச் சாகச் சொல்கிறாயா?
கடவுள்: உடல் தான் சாகிறது ஆன்மா அல்ல!
நபர்: அப்போது செத்து செத்து விளையாடுவதா?
கடவுள்: சாகப் பயந்தவன் சாதிப்பதில்லை
நான் என்ன நடக்கப் போகிறதென்று
ஞான திருஷ்டியால் அறிந்தவன்
நீ அறியமாட்டாய் அதான் பிதற்றுகிறாய்
நபர்: இது என்ன புதுவிதமான தீவிரவாதமா
இல்லை புளூவேல் விளையாட்டா
கடவுள்: நீ இறந்த பிறகு உன் பெயரைச் சொல்லிக் கொண்டு
உன்னைப் போல் நான் இங்கு வாழ்ந்து வருவேன்
நபர்: நல்லவனாய் வாழ்ந்ததற்கு இப்படி ஒரு தண்டனையா?
கடவுள்: நீ நல்லவன் நான் வல்லவன்
நீ நல்லவனாய் இருந்து சாதிக்க முடியாததை
நான் வல்லவனாய் இருந்து சாதித்துக் காட்டுவேன்
நபர்: ஒப்பந்தத்தை மீற மாட்டாய் என என்ன நிச்சயம்?
கடவுள்: ஏனென்றால் நான் வந்துபோகும் மனிதனல்ல
என்றுமிருக்கும் கடவுள்!