பேனாவுக்கு மறுபிறவி உண்டா?/சுரேஷ் ராஜகோபால்

இன்று நிகழ்ச்சியில் படித்த என் கவிதை

அவளின் துயரம்
பேனாவுக்கு மறுபிறவி உண்டா?

எனக்குத் தெரியாது
அடுத்த முறை பிறந்து
அவனைப் பற்றி
எழுத முடியாதே
என்கிற ஏக்கத்தாலே….
மை இருந்தும்
கண்ணீர் விட்டே அழுது
மடிகிறது பேனா…

17/03/2023