
இன்று 99 வது விருட்சம் கவிதை நேசிக்கும்
நிகழ்வில் நான் வாசித்த கவிதை கீழே.)
சிறகிலிருந்து விலகி
இறகொன்று காற்றிலாடி
பறந்தபடியேதான்
வீழ்கிறது.
செடியிலிருந்து பிரிந்து பூ
உதிர்ந்தாலும்
மலர்ந்தபடியேதான்
தரை சேர்கிறது.
கனல் அணைந்து
தீர்ந்து போன பின்பும்
கற்பூர வாசனை
காற்றெங்கும்.
. 17.03.23.
