ஹரிணியின் இரு என்பா கவிதைகள்

1.

கன்னல் மொழி குழந்தையின் மென்னகை
யன்னல் வழிபுகும் இனிக்கும் தென்றல்
அன்னையும் தந்தையும் ஊட்டிய பேரன்பு
இன்னலே வாழ்க்கை ஆகுமா?

2.

வாழத்தானே வந்தோம் சாவதற்கு இல்லை
புழுவுக்கும் பூவுக்கும் இருக்கும் வாழ்க்கை
வானமும் பூமியும் என்றும் காவலே
இன்னலே வாழ்க்கை ஆகுமா?