
உலகக் கவிதைகள் தினத்தை முன்னிட்டு நவீன விருட்சம் அழகியசிங்கர் நடத்திய சிறப்பு நிகழ்வில் இன்று எம் டி முத்துக்குமாரசாமி அவர்கள் ‘அகல் விளக்கும் மலை தீபமும் ’ என்ற தலைப்பில் உலகக் கவிதைகள் பற்றி ஆற்றிய உரை மிகவும் அறிவார்ந்த உரையாக அமைந்திருந்தது .
ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு , தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு கவிதைகள் மொழிபெயர்ப்பதில் உள்ள நுணுக்கங்களை அழகாக உதாரணங்களோடு விவரித்தார் . தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் நண்பர்கள் அனைவரும் தங்களது மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதும் சிறப்பாக இருந்தது .
பங்கு பெறும் வாய்ப்பை இழந்தவர்கள் , வெளிவரும் விருட்சம் யூடியூப் ஒளிபரப்பில் இந்த நிகழ்வைக் கண்டு கேட்டு மகிழலாம் .
தொடர்ந்து நடந்த நவீன விருட்சம் கலந்துரையாடல் நிகழ்வில் , நான் வாசித்த எனது மொழிபெயர்ப்புக் கவிதை.
தமிழூற்று சொல்வேந்தர் மன்ற மொழிபெயர்ப்புப் போட்டியில் முன்பு பரிசு பெற்ற கவிதை . இதன் ஆங்கில மூலம் இறுதியில்
அடப் ‘போடா’
அடப் ‘போடா’
அப்போது அழுவாயா
இப்போதே கட்டிப் பிடி
அடப் ‘போடா’
அப்போது மாலையா
இப்போதே பூவைக் கொடு
அடப் ‘போடா’
அப்போது புகழ்வாயா
இப்போதே வாயைத் திற
அடப் ‘போடா’
அப்போது மன்னிப்பாயா
இப்போதே மறந்து விடு
அடப் ‘போடா’
அப்போது தவிப்பாயா
இப்போதே தணித்துவிடு
அடப் ‘போடா’
அப்போது நேரமில்லை
இப்போதே வந்து விடு
அடப் ‘போடா’
அப்போது தாஜ்மஹாலா
இப்போதே கட்டிவிடு
அடப் ‘போடா’
அப்போது இருக்க மாட்டேன்
இப்போது இருக்கின்றேன்
—————————————–நாகேந்திர பாரதி
ஆங்கில மூலக் கவிதை கீழே :
When I’m dead – By Anne Lee Tzu Pheng, Singaporean poet.
When I’m dead…..,
Your tears will flow,..
But I won’t know…
Cry with me now instead!
You will send flowers,..
But I won’t see…
Send them now instead!
You’ll say words of praise,..
But I won’t hear..
Praise me now instead!
You’ll forget my faults,….
But I won’t know…..
Forget them now, instead!
You’ll miss me then,…
But I won’t feel…
Miss me now, instead
You’ll wish…
You could have spent more time with me,…
Spend it now instead!
You’ll wish…
You could have spent all your money on me…
Spend now instead!!
——————————Anne Lee Tzu Pheng,
