கவிதைகள் தெரியாதெனக்கு../மகேஷ்

வளைந்து
திரும்பும்
வண்டியின்
முன்னால்
இடவலம் மாறும்
மஞ்சள் சூரியன்

தாயகம்
திரும்பும்
பெண்ணின்
இதழில்
உறையும்
வெள்ளைப்
புன்னகை..

சாலை நீரில்
முகத்தை
சிலிர்க்கும்
பெயரேதும்
அறியா
சிறு பறவை

காற்றில் மிதந்து
மனதைக் கிளறும்
மறந்தே
போனதோர்
பழைய பாடல்..

அவ்வப்பொழுது
உணர்வுகள் நனைக்கும்
சொற்கள் நுழையா
கணங்கள் தவிர

கவிதைகள் தெரியாதெனக்கு..