
சினுங்கிய வானத்தின்
சிறு துளிகள் வாங்கி
மின்சாரக்கம்பிகளில்
சிலிர்த்திருந்த காலத்தில் சிதறிப்போய்விடுவாய்யென்று சிரிதேனும் எண்ணவில்லை.
காதலரின் சேதி சொல்ல சிட்டு உன்னை அழைத்தது போய்
காலத்தின் கோலம்
உன்னை காலனுக்கு
அளித்ததுவோ.
கூரை வீட்டுக்குள்ளேயே
கூட்டை கட்டி வாழ்ந்து
கொண்டு
குதித்து ஆடும் குழந்தைகளின்
குசலம் கேட்டு திரிந்து வந்தாய்.
ஆட்டிப்படைத்த அலைவீச்சால்
அடங்கி போனதோ
உன் மூச்சு.
மீட்டுத்தருமோ மானுடம் தான்
மரபாய் இருந்த மண்ணுயிரை
மானுடம் தான் மாறாதா?
மகரந்த அலை
வீசாதா?
