என் அன்னை மீனாட்சி/பி. ஆர். கிரிஜா

கூடல் மாநகரினிலேய
கொஞ்சும்
கிளியதனை
பாங்குடனே கையிலேந்தி
பச்சைப் புடவைதனிலே
பார்ப்போர் மனம் மயங்கிட
சுந்தரரை
மணமுடித்த
அங்கயற்கண்ணியே !
என் அழகு
மீனாட்சியே !
நான்மாடக் கூடலிலே
நாள்தோறும்
பவனி வரும்
பேரழகைக் காண
ஆயிரம் கண் வேண்டுமடி !
மலயத்துவசன்
மகளே ! என்
மனதினிலே
கொலுவிருக்கும்
மலைமகளே!
என் மூச்சிருக்கும்
நாள் வரைக்கும்
உன்னழகை
நான் ரசிக்க
என்னகமதனில்
குடியிருந்து
கோலோச்சுவாய்
என் தங்க மீனாட்சி !