செ.புனிதஜோதி கவிதை

இருளை
இரு பெரிய விழிகளால்
விழுங்கிக்கொண்டு
முன்செல்கிறது பேருந்து.

பாவமாய்
திரும்பிப் பார்கிறேன்
இருள் அங்கேத்தான்
நிற்கிறது

இப்போது தனித்து
நிற்கும் இருள்
இரு கைகளை நீட்டிநிற்கும்
குழந்தையாய்
புலப்படுகிறது

வீடு வந்த பிறகும்
விழிகளில் விடுபடமறுக்கிறது
அந்த இருள்குழந்தை