கு.மா.பா.திருநாவுக்கரசுவின் இரு
என்பாக்கள்

என்பா: 1

மற்றவிரல் நான்கும் சமமாக கைகுலுக்க,
கட்டைவிரல் ஒன்றுதான் உயரம் காட்டும்!
வெற்றியினை விரலுயர்த்தி குறிக்கும் உலகில்,
மேலான தெல்லாமே மேல்.-

என்பா-2:

மேலுயர்ந்தும் நெல்குனிந்து ஆக்கிய
வேருக்கு
தாள்பணிந்து நன்றி சொல்லும்! தாழ்ந்தாலும்
மேன்மக்கள் மேன்மக்கள் என்றே உணர்த்தும்
மேலான தெல்லாமே மேல்.