
நான் சிட்டுக்குருவியைப்
பார்த்து ரொம்ப வருடம்
ஆகிவிட்டது
வேண்டாமென்று
நினைத்தாலும்
புறா விட மாட்டேங்கறது
என் பாத்ரூமில்
முட்டையிட்டு
குஞ்சு பொறித்து
நாற்றத்துடன் அதன்
இருப்பிடம்
நான் பதைப்பதைத்துப்
போனேன்
செய்வதறியாது திகைத்தேன்
ஒருமுறை
கூட சிட்டுக்குருவி
வரம்பு மீறியதில்லை
ஏன்
கண்ணில் பட்டதில்லை
ஆனால்
இந்தக் காக்காவோ
மாடிக்குச்
சென்றால் துரத்துகிறது
யே, சிட்டுக்குருவியே
எங்கே இருக்கிறாய்?
