இரு வரிக் கவிதைகள்/மதுவந்தி

  1. வழிகாட்டிப் பலகைகள் தவறானபோது,
    தொலைந்து போவது சரி.
  2. நிலவு, விண்மீன்கள் இருந்தாலும் சூரியனே
    ஆகாயத்தில் ஒற்றைத் தலைமை.
  3. இணையத்தில் படிக்கலாம், செய்தித்தாள் எதற்கு?
    ஒரு நாள் பழைய செய்தி.

4.சாப்பாடு தண்ணீர் விற்பனை பாத்தாச்சு,
காற்றுக்குடுவை தொலைவில் இல்லை.

5.கணினியும் அறிதிறன் பேசியும் பதிவு செய்ய,
விரல்கள்தான் தெய்வம்.

மதுவந்தி. 25.03 23.