Skip to content
- காணாமல் போனான் மகன்/
கொடுத்தார்கள் புகார் அவனுடன் போன கைபேசிக்காக
- கருணை ஒதுக்கீட்டில் அரசு பணி கேட்டாள் கைக்குழந்தைக்காரி/
சுடுகாட்டிலிருந்து திரும்பிய மேலதிகாரியிடம்
- பாதம் தூக்கியது குழந்தை/
ஆகா பரதம் என்றாள் அம்மா
- பிண்டம் கொடுத்தார் குயில்களுக்கு/
பாடகியின் கருமாதியில்
- பற்றுவது சேலைகள் மட்டுமே/
வேட்டிகள் என்றும் பாதுகாப்பாய்
- எல்லோரும் சமம் /
நான் கொஞ்சம் கூடுதலாக
- முடி கொடுத்தேன்/
எடை பார்த்தேன் நம்பிக்கையுடன்
- எட்டிப் பார்த்தது /
ஓவியர் வீட்டினுள் சதுர நிலா.
- பொறாமை பட்டது/
குழந்தை மேல் மடிக்கணினி
- கொலுசாகிறது உருளுகையில்/
உனது நாற்காலியின் சக்கரம்
- கைபேசி பார்க்காத காக்கை/
திடீர் மழையில் சிறகு சிலுப்பியபடி
- குயிலின் கச்சேரி/
காலியானது காக்கை அரங்கம்
- இன்றைய கவிதை எழுதிவிட்டேன் எனும் மிதப்பில் நான்/
நாளை வரும் வரை
- யார் சொன்னார்கள்?
சிறைச்சாலையில் தான் இருக்கிறார்கள் கைதிகள் என
- பொய்யே சொல்லாது என் குழந்தை /
என்பதை விட பெரிய பொய் உண்டோ இவ்வுலகில்?