இரண்டு வரிக் கவிதைகள்/இலத்தூர் கி. சங்கரநாராயணன்

குடையின் மடிப்பு மழையில் கலையும்.

தேனடையின் வனப்பு புகையில் அழியும்.

வரம்புகள் தொடர்ந்தால் மீறல்கள் தொடரும்.

முறம் சாமரம் வீச பதரோ சீறும்
பயிரோ சேரும்.

மதம் சாமரம் வீச மக்களே ஏற்பர்
மக்களே தோற்பர்.

திறம் சாமரம் வீச நேர்மை வாழும்
கயமை வீழும்.

One Comment on “இரண்டு வரிக் கவிதைகள்/இலத்தூர் கி. சங்கரநாராயணன்”

Comments are closed.