
வருவான் என நினைத்தேன்
ஆனால் வரவில்லை.
நீயுமா என்றேன்
நானும் தான் என்றான்.
சலிக்கிறது காற்று
உச்சி வெயில்
நீ யார் என்றேன்
நான் தான் என்றான்
மனோவேகம் அதிகம்
ஒளிவேகத்தைவிட
கவிஞனின் பாடு
பெரும்பாடு
எழுதுவது கவிதையா என்றான்/
தாடியை வருடியபடி இல்லை என்றேன்
பிழைக்கத் தெரியாதவன் என்றான்/
அதான் எழுதுகிறேன் என்றேன்
கண்ணை மூடிக்கொண்டேன்
உலகம் இருண்டு விட்டது
செளக்கியமா என்றேன்
செளக்கியம்தான் என்றாள்!
