
சாமியாடிகளின் சந்நதத்தில் ஊர் நடுங்குகிறது.
ஆர்ப்பரிக்கிறார் எல்லைச்சாமி.
ஒரேயொரு எதிர்கருத்து.
ஒரேயடியாய் விலகியது நம் நட்பு.
வருகிறேன் உனைநோக்கி.
நீ முன்னால் போனபடியே.
அரையடி அங்குசம்தான்.
பிரம்மாண்ட யானை எப்போதும் அடிமை.
நடுநிலை நியாயமாய் மூன்றாமவர்.
இனி ரகசியங்கள் பொதுச்சொத்து.
சரியில்லாத தராசுகளில் நிறுத்துப்பார்.
நிறைகுறைகள் நிர்ணயமாவதில்லை.
சூரியன் கிடக்கட்டும்.
மழைத்துளி முப்பட்டை கண்ணாடி
அணியாவிடில் வானவில் இல்லை.
படுகளம் புகுந்தபின் காயங்கள் சாதாரணமே.
போரில் வெற்றி தோல்விகளே அடையாளச்சொல்.

Arumai