பிரபல யுடியூபர் மார்க் வெயின்ஸ்/நியாண்டர் செலவன்

தாய்லாந்தில் உள்ள ஒரு தமிழ் உணவகத்துக்கு போனார்.

கணவன், மனைவி நடத்தி வரும் உணவகம்.

பழைய இட்டிலியை எடுத்தார்கள். நன்றாக பிசைந்து, மாவில் போட்டு புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பஜ்ஜி மாதிரி சுட்டார்கள். அதை வாணலியில் போட்டு, மசாலா எல்லாம் போட்டு வணக்கி கொடுக்க ஆஹா, ஓஹோ என சப்புகொட்டி சாப்பிட்டார் மார்க் வெயின்ஸ்

பார்த்ததும் பகீர் என்றது. இட்டிலியை வைத்து இட்டிலி உப்புமா செய்வார்கள். இவர்கள் எண்ணெயில் போட்டு பஜ்ஜியே பண்ணிவிட்டார்களே? பழைய இட்டிலிக்கு இப்படி ஒரு சந்தையை கண்டுபிடித்த இவர்கள் புத்திசாலிகளா இல்லை உலகம் எல்லாம் சுற்றியும் பழைய இட்டிலியை சப்புகொட்டி தின்னும் மார்க் வெயின்ஸ் ஒரு லூசா என யோசித்து குழப்பமாக இருந்தது

அதன்பின் மார்க் வெயின்ஸ் ஆண்டுக்கு எட்டுகோடி ரூபாய் யுடியூபில் வருமானம் வாங்குகிறார் என்ற நினைவு வந்ததும் லூசு அவர் அல்ல, அந்த விடியோக்களை பார்த்து அவருக்கு விளம்பரம் தேடிக்கொடுக்கும் நாம தான் லூசு என புரிந்ததும் குழப்பம் நீங்கியது