ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில்

 

அழகியசிங்கர்

 

மோகினி : இன்று ஒரு கூட்டம் போயிருந்தீர்கள் போலிருக்கிறது.

அழகியசிங்கர் : ஆமாம்.  நானும் மனைவியும் போயிருந்தோம்.

ஜெகன் : எந்தக் கூட்டம்.”

அழகியசிங்கர் : எழுத்தாளர் சிவசஙகரியின் சூர்ய வம்சம் கூட்டம்.

மோகினி :  அக் கூட்டம் சவேரா என்ற நட்சத்திர ஓட்டலில் நடந்ததா?

அழகியசிங்கர் : ஆமாம். எழுத்தாளர் சிவசங்கரியின் ஆங்கில மொழியில் அவருடைய சுயசரிதம்.  

ஜெகன் : ஏற்கனவே தமிழில் வெளிவந்திருக்கிறது.

மோகினி : இரண்டாண்டுகளுக்கு முன் தமிழில் வெளிவந்த புத்தகம்.

ஜெகன் : அதை மொழிபெயர்த்தவர் யார்?

அழகியசிங்கர் : சித்திர தீபா அருணாசலம் 

மோகினி : நட்சத்திர ஓட்டலில் விருந்துடன் இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதி எல்லோருக்கும் அளிக்கப்பட்டது.

ஜெகன் : அந்தப் புத்தகத்தின் விலை ரூ.1000. 

மோகினி : தயாரிப்பு அற்புதம்.

அழகியசிங்கர் : ஒரு புத்தகம் கிடைக்கிறது என்றால் எல்லோருக்கும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது.  ஆனால் படிக்க வேண்டுமென்ற எண்ணம் அவ்வளவு சுலபமாய் ஏற்படுவதில்லை.

மோகினி : அது உண்மை.  இவ்வளவு நேர்த்தியான தயாரிப்பில் கொண்டு வரப்பட்ட இப் புத்தகத்தை ஒருவர் வாசித்தும் பார்க்க வேண்டும்.

ஜெகன் : நான் வாசிப்பது என்று முடிவு செய்துவிட்டேன்.

அழகியசிங்கர் : நான் இரண்டு பக்கங்கள் படித்தும் விட்டேன். லலிதா  என்ற பெண்ணைப் பற்றிப் படித்தேன்.  எழுத்தாளர் சிவசங்கரிக்கு வலதுகரமாக இருந்தவர் லலிதா. அந்தப் பெண்ணைப் பற்றிய குறிப்புகளைப் படித்தேன்.

மோகினி : தினமும் இரண்டு பக்ககங்கள் படித்தால் சில மாதங்களில் முடித்து விடலாம்.

அழகியசிங்கர் : இதோஇப்ப ஆரம்பித்தாயிற்று இரண்டு பக்கங்கள் படிக்க.

ஜெகன் : இன்று போதும்.

மோகினி : நம் சபையைக் கலைத்து விடலாம்.

அழகியசிங்கர் : நல்ல இரவு மலரட்டும்.