
போதிமரத்தை வெட்டிச் சாய்த்தா கட்டில் செய்ய வேண்டும்?
புதியப் பூக்களை வெடுக்கெனப் பறித்தா பூசை செய்ய வேண்டும்?
பாதி வயிற்றில் மீதி கனவில் உழைப்போன் சுருண்டு கிடக்க வேண்டும்?
நீதிசெய்ய மனமில்லாமலா படைத்தோன் தேரில் உலவ வேண்டும்.?
உண்மை உழைப்பு யாவும் இங்கே ஓலைக்குடிசையில் வாழவே..
இன்மை மறுமை என்று உலகில் சாத்தான் வேதம் ஓதவே..
நண்மை தேடும் ஒருவன் கூட கண்ணில் தென்பட வில்லையே!
நாளை இதுவே தொடர்கதையானால் படைத்தவன் எங்கு மில்லையே!
.
