ஈரடிக் கவிதைகள்/ஹரணி


000
1.கழுகிற்குத் தப்பிய கோழிக்குஞ்சு
இறந்தது என் கவிதைக்குள்.

  1. ஏம்மா கருப்பா பிறந்தோம்
    கடவுள் கருப்பென்றது தாய்க் காகம்.
  2. அம்மாவென அழுதாள் மலடி
    அம்மாவென அழுதாள் கர்ப்பிணி.
  3. வேலைக் கடிதம் வந்தது
    அவன் பால்தெளியல் அன்று.
  4. அடிபட்ட தெரு நாய்
    கடந்து போகிறது 108.

.