ஓர் எறும்பு தலையால் தரையை முகர்ந்தபடி ஒரு நேர்க் கோட்டில் ஏதோ அவசர வேலையாய்ச் சென்று கொண்டிருக்கத் திடீரென நின்றது.
எதிரே ஒரு பல்லி தனது பெருத்த வயிறு தரையில் அழுந்த சற்றே தூக்கிய தலையுடன் காத்துக் கொண்டிருந்தது. வாலை இலேசாக அசைத்துக் கொண்டு காத்துக் கிடந்தது.
மின்னல் வேகத்தில் அதன் வெளிர் சிவப்பு நாக்கு நீண்டு திரும்ப எறும்பு காணாமல் போயிற்று.
பசியாறிய முதலைப் பல்லி நான்கு கால்களையும் ஒவ்வொன்றாகத் தரையிலிருந்து தூக்கி வைத்து கண்களை உருட்டி மெல்ல நகர்ந்தது. பார்த்துக் கொண்டிருந்த எனக்குக் கடுங்கோபம் ஏறியது. பக்கத்தில் கிடந்த துடைப்பத்தால் அடிக்க எண்ணி எழுந்த வேகத்தில் கால் தடுக்கியது. மல்லாந்து விழுந்தேன்.
பார்வைக்கெட்டும் தொலைவில் நிதானமாக என்னைப் பார்த்தபடி அடுத்த எறும்புக்குகாத்திருந்தது பல்லி.
ReplyForward | | |