என்பா கவிதைகள்

கு. மா. பா. திருநாவுக்கரசு

என்பா 1


எலியைப் பிடிக்க விரட்டியது பூனை!

வளைபோன்ற குழாயுள் பதுங்கியது எலி! 

வேட்கையில் பாய்ந்த பூனையின் தலை, 

குழாய்வாயில் மாட்டியதே விதி


என்பா – 2


பன்முகத் தன்மையின் பெருமிதம் கொள்வார்! 

தன்மொழி இனத்தை உயர்த்திப் பிடிப்பார்! 

இன்னொரு நிகரை இரண்டாம் தரமாய்

எண்ணுவது இகழ்ச்சி அன்றோ?


என்பா – 3


கோவிலில் குடியிருந்தும் குங்குமம் வைப்பதில்லை! 

தேவாலயத்தில் வசித்தும் சிலுவை போடுவதில்லை! 

மசூதியில் வாழ்ந்தும் நமாஸ் செய்வதில்லை!

புறாக்களுக்கு படியளப்பது யார்?