
மூன்று நாட்களாக
சாப்பிட விடாமல்
தூங்க விடாமல்
உலுக்கி எடுத்து
உடலை அசத்திய
இருமல்
கஷாயம்
ஹோமியோபதி
குட்டிக் குளிகைத்
தாண்டி
கோரோனா கருணையால்
வாய் கிழிய திறக்க வைத்து
டார்ச் அடிக்காமல்
அலோபதி மருத்துவர்
தந்த மாத்திரைக்கும் பயப்படாமல்
தொடர்ந்த இருமல்
கோபக்கார தந்தையின்
இரண்டு சக்கர வாகனம்
வரும் சப்தம் கேட்டதும்
உள்ளே ஓடி படிக்க உட்காரும்
சிறுவன் போல
இருக்குமிடம் தெரியாமல் இருந்தது
நான் கவிதை எழுதி முடிக்கும் வரை
