
காத்திருக்கிறோம்
வரிசையில்
மருத்துவர் அறை வாசலில்
வழுக்கையை மறைக்க முயன்று
தோல்வியுற்ற நான்கைந்து முடிகளை
வாஞ்சையுடன் தடவும்
பொய்ப் பல்லுடையார்
முகமூடியை மறந்ததற்காக
தன்னை மானசீகமாக கோபித்துக் கொண்டு
கைகுட்டையால் முகம் பாதி மறைத்து
எங்கள் எல்லோரையும்
பிரதான கொரோனா பரப்பிகளாக
பாவித்து
முறைக்கும் வைரத்தோடணிந்தவள்
யாருமே கேட்டுக் கொள்ளாவிட்டாலும்
உரத்த குரலில் அரசியல் பேசும்
வெள்ளை வேட்டிக்காரர்
நடுவில்
பாட்டியின் ‘உஷ்’ ஷை அலட்சியம் செய்து
கற்பனையில் கிரிக்கெட் பந்து வீசும்
சிறுமி ஒருத்தி
எல்லோரும் முணுமுணுக்கிறோம்
உள்ளே போனவர்
அந்நியாயத்திற்கு
நேரம் எடுத்துக் கொள்கிறாரென்று
எல்லோரும்
