இரு கவிஞர்கள்/ஜி.பி.சதுர்புஜன்

கதவைச் சாத்தினேன்.
சன்னல்களைச் சாத்தினேன்.
டீவியை அணைத்தேன்.
மெள பைலை மெளனமாக்கினேன்.
நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும்
நோக்கிக்கொண்டே இருந்தேன்.
கிறுக்கினேன் கிறுக்கினேன்
கிறுக்கினேன்.
அட! இன்று கவிதை வரவில்லை!

டாக்டரைப் பார்க்க
க்யூவில் அமர்ந்திருந்த வத்ஸலா
பொறுமையிழந்தாள்.
அடக்க முடியாமல் கைக்குட்டையை
கையிலெடுத்தாள்.
தொண்டை கரகரத்தாள்..
அட! இரண்டு கவிதைகளை
இருமினாள்!