நா.விச்வநாதன்
-வாழ்தலுக்கு எதிராக அவர் எதையும் சொல்லிவிடவில்லை.எல்லாமே வனப்புதான்.
மரணம் உட்பட சௌந்தர்யம்தான்.இப்போதான வாழ்க்கை முடிவானதல்ல. நீள்கிறது வாசனையுடன். அவர் எல்லாவற்றிலும் தன்னைக் கண்டார்.பிம்பத்தின் பிரதிபிம்பத்தை எழுத்தாக்கும் ரகசியம்கண்டு வாசகனுக்கும் அந்த அநுபூதியை
அறிமுகப்படுத்தினார்.
லா.ச.ரா வின் அகங்காரம்- இதுவரை யாருமே செய்யாததைச் செய்ய வேண்
டுமென்ற அவசரம் இருந்தது.”என் எழுத்துக்களைப் புரிந்துகொள்வார்களா’ என்ற
தவிப்பும் அவரிடமிருந்தது.அன்பின் அடியாழத்திற்குச் சென்று அதன் மேன்மை
களை விவரிக்கும் உக்கிரமும் இருந்ததுசிந்தாநதி- லா.ச.ரா வாசகனாக நின்று
தன் கதையைத் தானே அனுபவித்த ரசானுபவம்தான்.
வங்கி அதிகாரியாக இருந்தவர்.வங்கி அதிகாரிகளுக்கேயுரிய சிடுமூஞ்சி முகம்
அவரிடமில்லை.யோகியின் முகம்.ரிஷியின் முகம்.எப்போதும் உபாசனை மந்தி
ரங்களை உருப்போட்டுக்கொண்டிருப்பதுமாதிரி-அவற்றை வாழ்க்கையில் பரவவி
ட வேண்டுமென்ற அவசரமான உத்தேசம்போல்.சொற்கள் வண்ணங்கள் பூசியதா
ய்-மதுவின் வண்ணம்.பாரிஜாதத்தின்நிறம்.சமதரையில் அவரால் நடக்க இய
ன்றதில்லை.சதா மேகங்களுக்கிடையேஉல்லாசமான பறத்தல்- யாத்திரைதான்.
சிலநேரம் நீளமாக எழுதுவார்.சிலநேரம் ஒற்றைச் சொல்.லா.ச.ரா போல் எழுத
முயன்று தோற்பதிலும் சுகம் என்று பலர் உளர்.சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள்,
சிந்தனைகள் எழுத்தில் இல்லை என்ற கேள்விகள் வராமலில்லை.தன் ‘ஜகதா’
வைக்காட்டுவார்.அவள் ரசமானவள்.மேன்மைகளையும் அல்லாதவைகளையும்
புரிந்துகொண்டவள்.சீர்திருத்தக்காரி. சிருஷ்டியாளனாகிய என்னாலேயே அவ
ளை எதிர்க்க முடியவில்லை என்றார்.அவள் வழி நான் பேசுவதாகக்கூடக் கொள்ள
லாம்.அப்படியே பேசாவிட்டால்தான் என்ன? அறியாமலிருப்பதன் அழகு – போற்ற
த்தான் வேண்டும் என்பார்.என்னை எதிர்த்தே என்பாத்திரங்கள் கலகம் செய்வது
இருக்கிறது.இதில் இம்சை இல்லை.
லா.ச.ரா எழுத்துக்கள் வாசற்படி,திண்ணை,ரேழி,முற்றம்,கூடம்,கொல்லை என
வீடு தாண்டியதில்லை? அவரிடம் பதிலிருந்தது. ‘இதற்குள், இந்தக் கூட்டிற்குள்
சொல்ல எனக்கு லட்சம்கோடி செய்திகள்இருக்கு.எழுதிமாளாது.இப்பிறவியும்
போதாது’ கதை மொழியை வசீகரமானமயக்கும் மொழியாக மாற்றியது லா.ச.ரா
தான்.
“இங்கே இருக்கும்போதே வீட்டில்ஜலத்தை வாங்கத் தடுமாற்றம் .பொண்டாட்டி
யைத் திருட்டுப்பார்வை.ஆயிரம் நாணல்கோணல்.நீங்களா கடிதம் எழுதப்போறே
ள்.அதனால்தான் நான் முந்திக் கொண்டதாக இருக்கட்டும்.அவ என்ன படிச்ச
பெண்.ஆம்படையானுக்குக் கடிதம் எழுதறாள்.வீட்டுப் பழைய பெரியவா,புதுப்
பெரியவா எல்லாம் என் கன்னத்தில் அடிக்காமல் தன் கன்னத்தில் இடித்துக் கொ
ண்டு ஏளனம் பண்ணலாம்’ ல.ச.ரா வின்வாசகத்தில் பெண்ணின் தகிப்பு. பெண்
ணின் தகிப்புதான் அழகு.இது சிற்றின்பமல்ல பேரின்பம் இது ஓர் ஒளி ஓவியம்.
நேர்த்தியாக வரைவது ஒருயாகம் மாதிரிதான்.பெண்ணுக்கானஅதீதஅனுசரணை
அவரிடம் இருந்தது.
லா.ச.ரா தன் எழுத்துவழி பொது அறத்தைப் பல இடங்களில் மீறிக்கடக்கிறார்.
இதுவே யுகதர்மம் என்கிறார்.மொழியின்நேர்த்தியான கையாளலும் அபிதா”வின்
அடர்த்தியும் மாய உலகத்திற்குச் செலுத்தும். சொற்களைக் கலைத்துப் பார்த்தால்
சாதாரணமாகத் தென்படும்.ராமாமிர்தம் கையகப்படுத்திக் கொள்ளும்போது
தனியழகின் மிளிர்ச்சி.அபிதா வை வாசித்துமுடித்தபிறகு ஐயரே! ஏன்யா அபிதா
வைக் கொன்றீர்? என்று பாயத்தோன்றும்
அம்பாளின் கால் சிலம்பொலி கேட்கவில்லை.உலகமே உபமானங்களும்
உபமேயங்களுமாக மாறிவருகிறது.நிஜத்தின் ஸ்வரூபங்களில் இதுவும் ஒன்
றோ? என தனக்குத்தானே புலம்பிக்கொண்டார். ‘என் நாவில் மந்திரம்போல்
ஒருநாமம் துடித்தது.வெளிப்பட்டால் அதன் நயம் உடனே பொரிந்துபோகும்.
உள்ளிருந்தால் நான் வெடித்துவிடுவேன்’என்று தவிப்பார்.
ஆனந்தத்தின் வடிவம் மனம்.மனம்தான் அதன் ஆயதனம்.ஆகாயம் பிரதிஷ்டை.
அதை ஆனந்தம் என்று உபாசிக்க வேண்டும்…என் தேவீ..வீ..எழுத்தும் எழுதுவதும்
என்ன. அது என்னவாம்.எழுதுவதை நிறுத்தி விட்டோமென்று இருந்துவிடவும் முடி
யுமோ.நீ எழுதியதை நீயே வாசிக்கிறாய். தொலைவுக்கு வந்துவிட்டாலென்ன லால்
குடியிலிருந்து “பெருந்திரு” ஊதுவத்தி வாசனை என்னைத் தொட்டுத் தடவுவா
ள்…லா.ச.ராவின் மாயவரிகள் வாசனைவிடுவதில்லை.
லா.ச.ரா. வின் தேடல் முற்றுப்பெறவில்லை.முற்றுப்பெறும் என்று தோன்றவும்
