
உன்னை விட்டொழிக்க முயற்சிக்கிறேன்
நீயோ
எக்காளமிடுகிறாய் என்னை
இறுகப் பற்றிக்கொண்டு
நான் தள்ளி நின்றால்
என்னமாய் சாகசம் புரிகிறாய்
இதமாய் வருடுகிறாய்
சாரலாய்ப் பொழிகிறாய் குலுங்கிச்
சிரிக்க வைக்கிறாய்
மயங்கி நிற்கையில்
எட்டி உதைக்கிறாய்
ஏமாந்து போகிறேன்
வலியில் துடிக்கிறேன்
உன்னைப் புரிந்து கொண்டேன்
உன் சாகசம் இனி செல்லாது
உன்னுடன் ஓர் ஒப்பந்தம்
நான் அழைக்கும் போது
அழைத்த படி வா
ஏற்றுக் கொள்கிறேன்
மாறாய் என்னை வீழ்த்த நினைத்தால்
மடிந்து போவாய்
நினைவில் கொள் என்
நினைவுச் சுரங்கமே
இனி பந்து உன் மைதானத்தில் !

Wonderful. The lyrics are so apt touching the heart. I read so many times again and again. Heartiest wishes dear jaya.