இலக்கிய இன்பம் 70/கோவை எழிலன்

எள்ளுக்குள் எண்ணெய்

தனிப்பாடல் திரட்டில் கிடைக்கும் ஓர் அம்மானைப் பாடல் மயிலாடுதுறை வாழும் வள்ளலார் கோயிலைப் பற்றியது.

முதல் பெண் : எள்ளுக்குள் எண்ணெய் போல் எவ்வுயிரிலும் இருக்கும் சிவபெருமானின் முடியில் ஒரு வாழும் பாம்பு உள்ளது என்கிறாள்.

இரண்டாம் பெண் : பாம்பு தலையில் இருந்தால் அது கிரகணத்தில் சந்திரனைப் பிடிப்பது போல் மற்ற நேரத்திலும் பிரானின் தலையில் உள்ள சந்திரனைப் பற்றாதோ ? என்று வினவுகிறாள்.

மூன்றாம் பெண் : மயில்கள் ஆடும் துறையில் வெளியே வர பாம்புக்கு ஏது தைரியம்? என்று பதிலளிக்கிறாள்.

“எள்ளுக்குள் எண்ணெய்போல்
எவ்வுயிர்க்கும் ஆனபிரான்
வள்ளல்திருச் செஞ்சடைமேல்
வாழ்பாம்புண் டம்மானை

வள்ளல்திருச் செஞ்சடைமேல்
வாழ்பாம்புண் டாமாகில்
துள்ளிவரும் அம்புலியைத்
தொடராதோ அம்மானை?

தொடருமோ மயிலாடு
துறைகண்டா லம்மானை”