
வீட்டில் கொண்டுவந்து விட்டுப்போன ஆட்டோக்காரர்
அலைபேசியில் ஏன் அழைக்கிறார்?
பல நாளாகப் பழக்கமானவர்
“தம்பி, சொல்லுங்கள்,
என்ன விஷயம்?”
“ஐயா”
வாங்கிய வெள்ளரிப் பிஞ்சுகளை
வண்டியிலேயே விட்டுவிட்டீர்கள்;
மாலையில் அந்தப் பக்கம்
வரும்போது தருகிறேன்”
“ஓ, மறந்துவிட்டேனா?
தம்பி,
உங்கள் குழந்தைகள்
உண்ணக் கொடுங்கள்,
அதுவே எனக்கு
மகிழ்ச்சி அளிக்கும்”
சில நொடிகள் மெளனம், பின்னர்
”அப்படியா, மிக்க நன்றி ஐயா”
அலைபேசிகள் அமைதியாகின்றன.
-
