வலிமை தரும் வலி /அனங்கன்

இரவின் அழகு இப்படி இருக்குமா இதுநாள் வரை
தெரியாது….

ஆடிக்கொண்டிருக்கும் கடைசிப்பல் தனக்கான இருப்பை வலிகொண்டு உணர்த்தியதன் மூலம்….
தூங்காத இரவானது.

இணையத்தில் அலசியதில்
பாட்டிவைத்தியம் பலநூறுவந்து கொட்டியது….

அந்தநள்ளிரவில் எதற்கும் சாத்தியமில்லை…
பால்நிலவு கொட்டியஔி பல்வலியில் கவிதை தரவில்லை…தூங்கவும் விடவில்லை…

இறையை அழைக்க இசையவில்லை மனது….எதற்கும் இருக்கட்டுமென்று பிள்ளையாரை வேண்டிக்கொண்டு ஒருகிராம்பை எடுத்துகடித்ததில் பல்மேலும்
ஆடியது….

உடம்பில் எல்லாம் முக்கியமென்பது நள்ளிரவில்
விளங்கியது….

விடிந்ததும் பல்வலிக்கு…தலைவலியும்
துணைக்குவந்தது….

வலிக்குப் பழகிப்போன வாழ்வில் இதற்காகவெல்லாம் வாழ்வைவெறுத்துவிட முடியுமா என்ன….?