மரணபயம்/வளவ. துரையன்

சிலநேரம் வெளிமட்டத்திலும்
பின் அடி ஆழத்திலும்
உலவின உற்சாகமாய்.

பெருங்கப்பலகளின் வேகத்திற்கும்
சிறு படகுகளின் துடிப்புகளுக்கும்
சிக்காதவை விதிவசப்பட்டு
வலைகளில் பிடிபட்டன.

கூடைக்காரி கைவிட்டுத்
தவறி விழுந்தவை
நாய்களுக்கும் காக்கைக்கும்
நன்கு உதவினாலும்

அவற்றின்
கண்களில் இருப்பது
இன்னும் மரணபயமே