குப்பை கிடங்கும் தளிரும்/பானுமதி

(விருட்சம் நடத்திய கவிதையைப் பேசலாம் வாங்க நிகழ்வில் சொல்லப்பட்ட கவிதை)

நிறைந்து வழிகின்றன
நான் போட்டவைகளும் நீங்கள்
எறிந்தவைகளும்

காதுகளில் எம் வி வி கேட்ட
அனைத்தும் அடங்கும்
மிகப் பெரும் கிடங்கு

சொல் ஒலித்த மாயம்
சொல்லாக சொல்லும் போது வேடம்

இத்தனை ஏணிகள் பாம்புகள் ஏறியும்

இறங்கியும் குவிந்து வரும் குப்பைகள் ;
கீழே கிடக்கும் கொள்ளா மட்டம்

அதிலும் ஒரு நாள் தளிரைப் பார்த்தேன்
குப்பையில் கிடந்த மாணிக்கம்
நம்முள் கிளரும் தளிர் நெடுமரமாய் தரு .
நிழலாய் செங்கநியாய் பறவை கூடாய்
மாறிவிடும் என்று மூளையில் ஒரு கீற்று.

ஆமாம் அதன் மீது விழுந்து அதை முறித்தது
உங்கள் குப்பையா என்னுடையதேதானா?

(திரு எம் வி வெங்கட்ராமன் அவர்கள் காதுகள் நாவலில் மனதில் எழும்பும் ஆபாசங்களை திறம்பட எழுதி இருப்பார். அதைப் பற்றிய குறிப்பு m, வாழ்நாள் முழுவதும் நாம் சேர்க்கும் குப்பைகளும் எப்போதாவது துளிர்க்கும் தளிரை அதாவது நல்ல எண்ணத்தை முறித்து விடுகிறது.)