
( “கவிதை வாசிக்கலாம் வாங்க” நிகழ்ச்சியில் படித்த கவிதைகள்.)
பேருந்து வருகைக்குக் காத்திருந்தேன்
அழுக்குச் சீலையில்
இடுப்பில் கைக்குழந்தையுடன்
பிச்சை கேட்டாள்.
சட்டைப் பை துழாவி
அவள் தட்டில்காசெடுத்துப்
போட்டேன்
கைகூப்பி வணங்கிச் சென்றாள்.காலூனம்
கொண்ட கிழவர்
கையேந்தி வந்தார்
அவருக்கும் காசொன்றைப் போட்டேன்
சலாம் வைத்துப் போனார்.
இடுப்பில் மட்டுமே துணியுடன்
சிறுமி மேலாடையின்றி கைநீட்டினாள்
அவள் கைதடவி
தருமம் செய்யப்
பலர் முன் வந்தனர்.
