ஆர் வத்ஸலா கவிதைகள்

(14 4 23 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் நான் வாசித்த கவிதைகள்)

சொர்க்கம்

கூடவே கூடாது
சர்க்கரை
தேநீரில்
என்ற பின்
எங்கள் ஆஸ்தான மருத்துவர்
மனைவியின் கண் சாடை
படித்து
காபியிலும் கூடத்தான்
என்பார் அவசர திருத்தமாய்

கொஞ்சம் வெல்லம்
சேர்த்துக் கொள்ளலாம்
என்றார்
தாடிக்கார ஆயுர்வேதர்
கொடுத்த காணிக்கைக்கு விசுவாசமாய்
மனைவியின் தீர்க்கப் பார்வையில்
கட்டுண்டு
’பனைவெல்லம்’ எனும் பின்குறிப்புடன்
பின் வாங்கி

திரைப்படத்தில் காண்பிப்பது போல
முன் பிறப்பில் நடந்த காட்சிகளாக
இவற்றை எல்லாம் ஒதுக்கி
பலர் கூடிய விருந்தில்
முறைக்கும் மனைவியின்
கண்களைத் தவிர்த்து
அப்போதைக்கு அவளால்
அது தான் செய்ய முடியும்
என்கிற வீரத்தில்
இரண்டு சதுர சர்க்கரை கட்டிகளை
போட்டுக் கொள்கிறேன்
ஆவியுடன் என்னை சிநேகிக்கும்
தேநீரில்

பக்கத்தில் சாஸுடன்
சாதுவாய் இரண்டு சமோசா
அமர்ந்திருக்கிறது
மண்டபக் கதவின் கண்ணாடியில்
பட்டுத் தெறிக்கிறது
எங்களிருவருக்கும் பிடித்த மழை
மனைவியின் கண்களில்
காதலூட்டிக் கொண்டு

பரிதாபம்

பாட்டி படி தாண்டா பத்தினி
பதினைந்தில் தாலி வாங்கி
அன்று முதல் அடி வாங்கி
சக்களத்தியுடன் தாத்தாவை பகிர்ந்து கொண்டு
(தாலி வாங்கா சக்களத்திக்கும் அடிதானாம்)
வருடம் தவறாமல் பிரசவித்து
(தாத்தாவால் கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை
செய்விக்கப் பட்டதால் சக்களத்திக்கு அது கிடையாது)

பின்
மகன்கள் தலையெடுக்க
தாத்தாவின் வருமானம், உடல் வலிமையுடன்
அடியும் சக்களத்தியும்
காணாமல் போக
அறுபதில் பாட்டி ராட்சசியாக