திருமதி கிரிஜா ராகவன் எழுதிய மகள் தாய்க் காற்றும் உதவி/சாந்தி ரஸவாதி

என்ற சிறுகதை ரௌத்திரம் பழகு என்னும் கதை தொகுதியில் இருந்து இன்றைக்கு கதைகளை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியில் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது

அம்மா அஞ்சு மகள் தமன்னா இருவரும் தோழிகள் போல செல்ல சண்டைகள் அன்பு பரிமாறல் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மகள் தமன்னா கார்ப்பரேட் கம்பெனி மார்க்கெட்டிங் அதிகாரி அவளை கண்ணுக்குள் வைத்து காப்பாற்றி வளர்த்து ஆளாக்கிய அம்மா அஞ்சு.

மூன்று வயது குழந்தை தமன்னாவுடன கணவன் அம்மா அக்காவின் பேச்சைக் கேட்டு அவர்களை வீட்டை விட்டு துரத்தி போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் என்று அழைத்து இறுதியில் விடுதலை விவாகரத்து அந்த நாளை நினைத்தால் கூட குமுறுகிறது வங்கியில் மகள் பேரில் ஒரு லட்சம் டெபாசிட் 25 வருடம் போட்டு இது என் மகள் வாழ்க்கைக்கு ஒரு பைசா கூட நீ இதில் தொட முடியாது என்று மனைவியிடம் முழக்கமிட்ட கணவன் வச்சு வாழ த்தெரியாத அப்பா கொடுக்கிற ஒரு லட்சமா மகளை வாழ வைக்கப் போறது அல்லது பெத்த குழந்தைக்கு அவன் போடுற மதிப்பே ஒரு லட்சம் ரூபா தானா

அன்று ஓட ஆரம்பித்தாள் மகள் படித்து வளர்ந்து நல்ல பதவியில் அமர்ந்தாள் அம்மாவை ராணி போல வைத்துக்கொண்டாள் சொந்த பிளாட் பெரிய டிவி மாடர்ன் கிச்சன் கார் தங்கத் தட்டில் வைத்து தாங்காத குறைதான் அன்று அம்மா அருகில் படுத்தவள் அம்மா உன்னை கேட்காமல் நான் ஒரு காரியம் பண்ணப் போறேன் என்றாள் அம்மா தூக்க கலக்கத்தில் நீ எது பண்ணினாலும் சரியா தான் இருக்கும் என்கிறாள்

சென்னையில் இருந்து 60 கிலோ மீட்டர் தள்ளி காந்தி அமைதி இல்லம் அது ஒரு முதியோர் இல்லம் காந்தியவாதி விஜயன் இரண்டு அக்காக்கள் விதவை அம்மா இவர்களை காப்பாற்றி திருமணம் செய்து கொள்ளாமல் அவர்கள் காலத்துக்கு பிறகு இந்த முதியோர் இல்லத்தை அமைத்து வெகு பொறுப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்
நிதி எங்கிருந்தோ எல்லாம் வருகிறது போன வாரம் ஒரு இளம் பெண் அதிகாரி நிதி கொடுக்க வந்தவள் எல்லா முதியோர்களிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்த விட்டு சிறப்பாக அந்த பாலு சாரிடம் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தாள் பாலு ஒரு சிடுசிடு மனுஷன் ஒரே புலம்பல் அவர் பணத்தை பிடிங்கிக்கிட்டு உறவினர்கள் இங்க
சேர்த்துட்டாங்க இந்த மாதிரி நிதி கொடுக்கறவங்களுக்கு ஒரு விழா எடுத்து அவர்களை பேச வச்சு அவங்க கையாலேயே அந்த காசோலையை வாங்கிக் கொள்வது தான் அந்த முதியோர் இல்லத்தோட வழக்கம் இப்ப காலை சிற்றுண்டி உடன் விழா தொடங்கியது அம்மாவுடன் செவர்லெட் காரை ஓட்டி வந்து தமன்னா சென்று இறங்கினாள் மைக்கை பிடித்து பேசினாள்

மதிப்பிற்குரிய விஜயன் அவர்களே என்னுடைய அருமை தாத்தா பாட்டிகளே என்று ஆரம்பித்து பேசியவள் பாலு சார் இங்க வரணும். பாலு எப்பவும் போல மீட்டிங் வரவே இல்லை அவரை போய் அழைத்து வந்தார்கள் தன் தாயை மேடைக்கு அழைத்து அப்பவே தெரிந்து விடுகிறது பாலு அஞ்சுவின் கணவர் என்று அதிர்ச்சியாக இருந்தாலும் தமன்னா சொல்வதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது அப்பா எனக்கு கொடுத்த ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் இன்று 5 லட்சமாக வளர்ந்திருக்கிறது அத்துடன் என்னுடைய சுய சம்பாத்தியத்தில் இருந்து ஐந்து லட்சத்தை சேர்த்து 10 லட்ச ரூபாய் இந்த இடத்துக்கு நன்கொடை அளிக்கிறேன்

என் சின்ன வயது ஞாபகங்கள் அம்மாவிடம் ஓயாமல் சண்டை போடும் அப்பா போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் என்று எங்களை இழுத்து எங்களை அல்லலுக்கு ஆளாக்கிய தந்தை இவர் எனக்கு கொடுத்த பணத்தை அவர் இருக்கும் இல்லத்திற்கு கொடுப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று முடிக்கிறார் அம்மாவுடைய வலிக்கு வருடல் தந்து அம்மாவுடைய ரணத்துக்கு ஒத்தடம் கொடுத்து தன்னுடைய காயங்களை துடைத்த பெண்ணை பெருமையுடன் பார்த்தாள்
அம்மா

தன் குடும்பம் கண்ணெதிரில் செல்வதை பார்த்து இடிந்து போய் நின்றார் பாலு

சரளமான நடையில் செல்கிறது கதை முடிவை ஊகிக்க முடிந்தாலும் சுவாரசியமாக இருந்தது.

கெட்டவன் திருந்தணும் தப்பு செய்றவங்க தண்டனை அனுபவிக்கணும் ஒரு நாவல் ஒரு சினிமா இதை எதிர்பார்த்துதான் உட்கார்றோம். இதுக்கு இந்த கதை நமக்கு நல்ல திருப்தி அளிக்கிறது கிரிஜா மேடம் வாழ்த்துக்கள் இந்த அரிய வாய்ப்பை அளித்த அழகிய சிங்கர் அவர்களுக்கு நன்றி