
(“கவிதை வாசிக்கலாம் வாங்க” நிகழ்ச்சியில் படித்த எனது கவிதைகள்)
வேப்பமர நிழல்
என்வீட்டு வேப்பமர நிழலில்
நான் நாற்காலியில் அமர்ந்திருந்தேன்
நன்றாகக் காற்று வீசவே
சுகமாக இருந்தேன்
நேர்மேலே தண்ணீர்த் தொட்டி
மோட்டார் போட்டு நீர் நிரம்பக்
காத்திருந்தேன் : நிரம்பியதால்
நீர் வெளியே கொட்ட
மரமும் லேசாக நனைந்தது
என்மீதும் தெளித்தது
மரத்தின் மீதிருந்த
காக்கைகள் வெகு வேகமாகச்
சிறகடித்து எங்கோ பறந்தன.
என்பா 1
குளிர் காலம் கடந்து போனது
வசந்த காலம் வாழ்வு இனிக்கும்
வேனில் காலம் வெப்பமாகத் தொடங்கும்
தமிழ்ப் புத்தாண்டே வருக
என்பா 2
தமிழ் மொழியோ தொன்மை மிகுந்தது
தமிழில் இனிய சொல் இனிமை
தமிழே கதியென்றால் வந்திடும் கவிதை
தமிழ்ப் புத்தாண்டே வருக.
