‘கஷ்டங்கள்’/எஸ்ஸார்சி

கவிதை நேசிப்போர் மெய்நிகர்அரங்கில் இன்று (14.04.2023)
வாசித்த கவிதை

கோடி கோடியாய் வைத்திருப்போர்க்கு
இன்னும் கொட்டி கொட்டிக் தரும்
சதித்திட்டங்களை ஓயாமல்
தீட்டும் புத்திசாலிகளைவோட்டுப்

பெட்டிகள் தாமே கூட்டிவந்து
கொலு ஏற்றின
அரசு நிறுவனங்களைக்கணக்குப்போட்டுத்
தரந்தாழ்த்தி சொல்லி வைத்தாற்போல்
அதே நாலு பேருக்குத்தாரை வார்க்கும்
தறுதலைகள் கண்முன்னே கம்பீரமாய்
உலா
வருகிறார்கள்
நிர்மாணப் பணிகள் எதுவாயிருந்தாலென்ன
மொத்தமாய் காண்ட்ராக்ட்
அதனதனில்பாதி
பின்பக்கமாய்தனக்கே
வந்துசேரும் சூட்சுமம்
தெரிந்தவர்கள்
தங்கச்செங்கோல்
வைத்திருக்கிறார்கள்
ஆளும்கட்சியோ
எதிரக்கட்சியோ
சாராயம் தயாரிப்பவர்கள்
மலைமலையாய்க் காசு பார்க்கிறார்கள்
வயிற்றுப்பசிக்குச்
சாராயப் புட்டி விற்கும்
டாஸ்மார்க் ஊழியர்கள்
அரசு
கஜானா நிரப்புகிறார்கள்.
எம்மக்கள் எப்போதும்
ஆனந்தவெள்ளத்தில்
திளைத்தபடி.
நல்ல புத்தி எல்லோர்க்கும்
தருவதில் என்ன தயக்கம்
என்ன சுணக்கம்
இறைவா? என்றார் தேசபிதா.
என்கஷ்டம்எனக்கு
உன்கஷ்டம்உனக்கு
சொல்லி மறைந்தார்
அவ்விறைவன்.