
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை;
கவிதைகளை கவிஞர்களே வாசிப்பதும் இல்லை;
அவரவர் கவிதைகளை அவரவரே வாசிக்கட்டும்;
என்னதான் செய்து தொலைக்க?!
**********
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை;
புதுக் கவிதை புரிவதில்லை!
மரபுக் கவிதை மந்தம் ஆச்சு!
எங்கே கவிதை? கேட்கிறான் ரசிகன்!
******
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை;
புதுக் கவிதை நாலு வரி!
அதன் “இஸத்தை “(ism) விளக்க நாற்பது வரி!
இரண்டுமே புரியாமல் தவிப்பது வாசகன் விதி!
*************
(நல்ல) கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை;
அரசியல் சினிமா செல்வாக்கில் ஆரவாரிக்கும் (புதுக்கவிதைகள்!)
நல்ல சில கவிதைகள் மூலையில் முடக்கம்!
வாசகனோ விளம்பர மயக்கத்தில்!
***********
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை;
பிரபஞ்சம் கவித்துவத்தால் நிரம்பி வழிகிறது;
பிழிந்தெடுக்க வாருங்கள் கவிஞர்களே!
விற்பனையை மறப்போம்; சொற்பதத்தில் நிலைப்போம்;
கவனிக்கும் மெல்ல காலம்!
**********
கவிதைப் புத்தகங்கள் விற்பதில்லை;
ஐந்து கவிதைகளுக்கு மேல் அழகிய சிங்கர் பரிசுண்டாமே!
விற்கும் போது விற்கட்டும்;
எழுதுவோம் வா கவிஞா!
