
கவிதைப் புத்தகங்கள்
விற்பது இல்லை
காசுக்கும் தோசைக்கும்
விற்பது இல்லை
ஆசைக்கு எழுதினேன்
ஆளுமை கொண்டேன்
வேறென்ன கவலை விடுவாய்
***********
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
கட்டுக் கட்டாய்
பரணையில் உறங்கும்
கவிதையின் தாக்கம் கவிதையே தேடுமாம்
சும்மா இருந்தால் சுகமே.
*************
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
நல்ல பொருளெல்லாம் நம்மிடமே இருக்கணுமாம்
நூத்திப் பத்தாம்
பக்கக் கவிதை
என்னிடம் சொல்வது ஏனோ
*************
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
அந்தத் தவற்றை
அடியேன் செய்யேன்
எழுத்தும் அச்சுமாய்
எங்கள் பந்தம்
காலம் கடந்தும் காண்போமே.
************
கவிதைப் புத்தகங்கள்
விற்பது இல்லை
கற்பனை எழுத்தைத்
தாங்கும் கருவூலத்தை
விற்றால் வரும்
பணம் சொல்லுமா
உணர்வாய்த் தொடரும் உறவை.

ஐயா மனம் நெகிழ்ந்து நன்றி சொல்லி மகிழ்கிறேன். இலத்தூர் கி. சங்கரநாராயணன்