
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை.
கவிதைகள் அதற்காக அழுவது இல்லை.
தம் பெருமை அவற்றுக்குத் தெரியும்.
வானவில்லை நாணேற்றுவது யார்?
2.
கவிதை புத்தகங்கள் விற்பது இல்லை.
விற்பதற்காக எழுதப் படுவதும் இல்லை;
அனைத்தும் பரிசாய் கொடுக்கப் படுவதற்கே;
கையெட்டும் இடத்தில் இருப்பதால்.
3.
கவிதை புத்தகங்கள்
விற்பது இல்லை.
தாழ்ந்தவை இல்லை
அவை,எந்நாளும்;
வாழ்க்கை நலன் புகட்டும் எப்போதும்;
கழுதை அறியாது கற்பூரம்.
- கவிதை புத்தகங்கள்
விற்பது இல்லை.
மலின ரசனைக்கு
எழுதப் படவில்லை.
விற்காவிடில் பாதகம் ஒன்றும் இல்லை.
உயர் பொருள் எவரறிந்தார்?
5.
கவிதை புத்தகங்கள் விற்பது இல்லை.
கவிஞர்களின் பழக்கம் கவிதை எழுதுவது.
மிக நல்ல கவிதை
என்ற நினைப்பில்;
நல் நினைவே இன்பம்.
6.
கவிதை புத்தகங்கள்
விற்பது இல்லை.
கதை புத்தகங்களையும் கொள்வோர் இல்லை.
தமிழ் படிப்போர் தகவிலார் என்பதாலா?
தமிழர் தரம் உயரட்டும்.

Excellent
Excellant