
என்பா 109
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
கவிதைகள் யாரும் படிப்பதும் இல்லை
கவிதைகள் எழுதும்போது
தூக்கம் வந்துவிடுகிறது
கவிதை என் மூச்சு
என்பா 110
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
ஆமாம் என்ன செய்வது இப்போது
உலகத்தில் அற்புதமான
கண்டுபிடிப்பு கவிதைகள்தான்
எல்லோரும் எழுதிக்கொண்டுதான்
இருக்கிறோம்
என்பா 111
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
யாரும் யாருடைய
கவிதைகளையும் படிப்பதில்லை
கவிதை எழுதுபவர்கள் மட்டும் அவர்களுடைய
கவிதைகளை படித்தே
தீரவேண்டும்
